Sunday, 14 May 2017

ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு

ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு

தகவல்​ தொடர்பாடல் தொழிநுட்பமானது பல வழிகளின் ஊடாக சமூகத்துக்கு பங்களிப்பு செய்கின்றது
            1.     கல்வி(Education)
                 2.     பாதுகாப்பு(Defence/ protection)
                 3.     பொழுதுபோக்கு(Entertainment)
                 4.     தொடர்பாடல்(Communication)
                 5.     கணக்கியலும் வங்கியியலும(Accounting& Banking)
                 6.     பொறியியல்(Engineering)
                 7.     வைத்தியசலை​(Hospital)

01.கல்வி (Education with ICT)
தகவல்​ தொடர்பாடல் தொழிநுட்பமானது இன்று கல்விது​றையோடு மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது.பொதுவாக, கல்வியில் தகவல்தொடர்பின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவர்.ஆனால், தகவல்தொடர்பு தொழிநுட்பத்தின் குறிப்பிட்ட பங்கு மற்றும் அதன் மழுமையான பலனை பெருதல் குறித்தே விவாதங்கள் நடந்து வருகின்றது.
  •   கணினி வழிகாட்டலில் கற்றல் (computer Assister learning) 
  •      இன்றைய நுட்பங்கள்
      கல்வி  கற்றலுக்கு பயன்படும் நுட்பங்கள் குறித்த ஆய்வில்,             
     கீழுகண்ட    நுட்பங்கள் அடங்கும்.
ü கற்பிக்கும் உபகரணங்கள்
ü ஆடயோ, வீடயோ மற்றும் இணைய வடிவிளான கருவிகள்
ü மென்பொருள், பொருளடக்கம்
ü இணைக்கும் மறைகள்
ü ஊடகம்( வனொலி,தொலைக்காட்சி ) 
ü தகவல்களை பெற கூடிய இணைய தளங்கள்
Noolagam.org
W3school.com
Wikipidia.com
Tutorial.com

       வினாக்கள் தொகுத்தல்,செயட்பாடு  மற்றும் பயிற்சி அளித்தல்,
      பிரச்சினைக்கு தீர்வு காணல்
*    கணினி வழிகாட்டலிலான நிர்வாகம்(Computer Assister School Administration )
பாடசலை மாணவர்களின் பதிவினை மேறகொள்ளல்
அலுவலக வேளைளை இலகுவாகச் செய்ய இணைய வகுப்றை
 (E-learning , online learning, web base learning)
     இதன் மூலம் ஒரநோக்கத்தை அடிப்டையாக் கொண்டு கற்றுக்கொள்ளல் ஆகம்.
     இணையத்தில் 2.0 இல் இருவளித்தொடர்பாடலில் பல ஊடகங்கள் காணப்படுகின்றது.
     Facebook, blog, Flicker, google, YouTube, Hi5, slideshare, Myspace,    
     linked in, Twitter, word pros ,RSS  , seondlife 
   
   ICT இளால் கல்வியில் ஏற்படும் தாக்கம்.
 கல்வியில்  ICT ஏற்படுத்தும் தாக்கங்கங்களை இரண்டு வகையாக நோக்கலாம்.

சாதகமான காரணிகள்

  1. புதிய தொழிநுட்பத்தில் தகவல்களை அறிந்து கொள்ளலாம்










Thursday, 11 May 2017

விசைப்பலகை பற்றி தமிழில்..



விசைப்பலகை அல்லது தட்டச்சு எனப்படுவது கணினிக்கு தகவல்களை உள்ளீடு செய்ய பயன்படுத்தப்படும் கணினியின் ஒரு பாகமாகும். இது வௌிப்புறக் கருவிக்குள் அடக்கும். இந்த விசைப்பலகை இல்லாமல் தகவல்களை உள்ளீடு செய்யவது கடினமான விடயமாகும்.                                

                                                                                                         இவ்விசைப்பலகையானது எண்கள்,குறியீடுகள், கட்டளைகள் function keys (F1-F12), Number key (0-9) ,
Text key Button (A-Z) என்ற அம்சங்களை அல்லது பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 104 keys  குறையாமல் இல்லை.

                                                                                  ஆரம்ப காலத்தில் இருந்து ஒவ்வொறு காலக்கட்டத்திலும் பல்வேறு வடிவங்கங்களை கண்ட விசைப்பலகையானது இன்று திரை விசைப்பலகை தொழிநுட்பம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் இன்று மொழிக்கு ஏற்ற வகையில் விசைப்பலகைகளை பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது.
        உதாரணமாக :- தமிழ்99 தட்டச்சு (தமிழ் நாட்டு அரசின் ஏற்பு பெற்ற தமிழ்                                           மொழிக்கான விசைப்பலகையாகும்.)

                                         ரெங்கநாதன் SLS 1326 (இலங்கை அரசினால்                                                                      சீர்த்திருத்தப்பட் தமிழ் விசைப்பலகையாகும்) 

                                                                            அந்த வகையில் விசைப்பலகையில் தளக்கோலங்கள் முக்கியமானது.   தளக்கோலம் எனப்படுவது, ஒரு விசைப்பலகையில் எழுத்தொன்றிக்கு அழுத்தவேண்டிய விசை/விசைகளின் ஒழுங்கும் அவை வைப்பு முறையும் தளமாகும். இத்தளக்கோலமானது ஒவ்வொறு மொழிக்கும் தனித்தனியாக காணப்படுகின்றது.

                                ஆரம் காலத்தில் தட்டச்சுப்பொறி பயன்படுத்தப்பட்ட காலம் தொடக்கம் விசைப்பலகை பயன்பாடு வரை தமிழுக்கென தளக்கோளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வகையாகும்.
          
                                                    தளக்கோளம்

எழுத்தியல் விசைப்பலகை தளக்கோளம்
ஒலியியல்விசைப்பலகை தளக்கோளம்

1
  1.  எழுத்தியல் விசைப்பலகை தளக்கோளம்         
            ஒருஎழுத்தினுடைய பகுதிகளான கொம்பு, புள்ளி, சுலி போன்ற                               வகையில்அச்சிடப்படுகின்றது.   
               உதாரணம்   :   புள்ளி ( . )
                                                சுலி ( ி , ீ ) 
                                                கொம்பு ( ​ெ , ​ே )

      2.      ஒலியியல் விசைப்பலகை தளக்கோளம்

        ஒரு எழுத்தை அச்சிட அவ் எழுத்துக்குறிய ஒலியை ஆக்கும் ஒலிகளை                 குறிக்கும்.
             உதாரணம் :- க = (க் + அ) 
                                         ம= ( ம் +அ)
கணினி பொறியின் வருகையின் பின்னர் மென்பொருள் ஒன்றின் உதவியுடன் இயங்கும் படியாக வடிவமைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்99 தளக்கோலமே தமிழுக்கான நியம விசைப்பலகை ஆகும்.
                                                                                       
                                                                                       இந்த வகையில் இலங்கையில் ICTA வினால் தமிழுக்கான விசைப்பலகை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒருங்குறியை அடிப்படையாக கொண்டது. இதில் தட்டச்சு செய்யும் போது இதன் எழுத்துக்கள் ஒருங்குறியாகவே கிடைக்கும். அத்தோடு இந்த விசைப்பலகை மூன்று மொழிகளையும் கொண்டது.


ICTA இன் தமிழுக்கான விசைப்பலகை








இலங்கையில் தமிழ் விசைப்பலகை.

இலங்கையில் தமிழ் தட்டச்சு விசைப்பலகையானது. ரங்கநாதன் விசைப்பலகையை அடிப்படையாக கொண்டது.(சிற்சில வித்தியாசங்களை கொண்டுள்ளது.) இன்று பெரிதும் பயன்பாட்டில் உள்ள பாமினி(Bamini), கலகம்(Kalaham), குஷ்பு (Kushbu), கிளவி(Kilavi) போன்ற எழுத்துக்களும் இந்த ரங்கநாதன் விசைப்பலகையையே அடிப்படையாக கொண்டுள்ளது.

                                                                          இலங்கையில் தமிழ் தட்டச்சு செய்வதற்கு மென்மென்பொருள் ஒன்று காணப்படுகின்றது. இதனை KEY BOARD DRIVE என அழைப்பர். இதனை ICTA வழங்குகின்றது.இலங்கையில் தமிழ் தட்டச்சு செய்வதற்கு மென்மென்பொருள் ஒன்று காணப்படுகின்றது. இதனை KEY BOARD DRIVE என அழைப்பர். இதனை ICTA வழங்குகின்றது.


Tuesday, 9 May 2017

தமிழ் எழுத்துக்கள் பற்றி தமிழில்....

தமிழ் எழுத்துக்கள்     

தமிழில் பல்வேறு வகையான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
   உதாரணமாக :-  பாமினி (Bamini) , கலகம்(Kalaham) , வள்ளுவர் (Valluvar),                                குஷ்பு(Kushbu), சரஸ்வதி(Saraswathy),                                                                கிளவி(Kilavi) போன்றன சிலவாகும்.

ஒவ்வொரு வகையான விசைப்பலகைகளும் வெவ்வேறு வகையான எழுத்துருக்களை கொண்டு காணப்படும்.
                                                தமிழில் தட்டச்சு செய்யும் போது ஒவ்வொறு விசைப்பலகைக்கும் எழுத்துருக்கள் விசை வேறுப்படுகின்றது. தமிழில் தட்டச்சு செய்யும் போது ஒவ்வொறு விசைப்பலகைக்கும் எழுத்துருக்கள் விசை வேறுப்படுகின்றது.
           உதாரணமாக :-  நாம் பாமினியை பயன்படுத்தி “அ”  என்ற எழுத்தை                                             தட்டச்சி செய்வோமானால் அதே விசை குஷ்பு                                                     எழுத்துருவை பயன்படுத்தின் வேறுப்படும்.

                        மேலும் நாம் தட்டச்சு செய்வதற்கு என்ன தமிழ்  எழுத்துருவை பயன்படுத்துகின்றோமோ குறித்த  மற்றுமொறு கணினியில் காணப்பட்டால் மாத்திரமே அதனை பார்க்க முடியும். இப்பிரச்சினைக்கு தீர்வாகவே ஒருங்குறி எழுத்துரு அறிமுகப்படுத்தப்பட்டது. Latha/ Arial Unicode MS  (windows MS உடன் கிடைக்கின்றது) போன்ற font ஒருங்குறி எழுத்துரு ஆகும். 

தமிழில் தட்டச்சு செய்ய ஒழுங்கு முறை காணப்படுகின்றது.

1.   உயிர் ‘அ’ உடன் புணர்ந்த மெய் எழுத்துக்களை  விசைப்பலகையில் ஒரு விசையை  அழுத்துவதன் பெற்றுக்கொள்ளலாம்.

        உதாரணமாக :- அ,க,த, இ .... பேன்ற 18 உயிர் எழுத்துக்களும்.

2.    உயிரெழுத்துக்களைத் தட்டச்சு செய்தல்

     இவ்வெழுத்துக்கள் விசைப்பலகையின் கீழ் வரிசையில் (4ம், 5ம்                          வரிசையில்)காணப்படும்.

    “ஐ” ஆனது ‘I’ என்ற ஆங்கிள எழுத்தில் காணப்படும்.

3.   இ, ஈ புணர்ச்சி 

மெய் எழுத்துக்களுடன் இ புணரும் போது கிடைக்கும்  மி, தி, வி……. போன்ற எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்கு முதலில் ம, த, வ …...ஐத் தட்டச்சுச் செய்த பின்னர் ‘p’  என்ற விசையில் உள்ள விசிறியைப்பயன்பத்தி  தட்டச்சுச் செய்ய வேண்டும்.

“ஈ” புணருமிடத்து குறித்த எழுத்துடன் shift + ‘p’ஐ  அழுத்த வேண்டும்.

4.   உ,ஊ புணர்ச்சி

     மெய் எழுத்துக்கடளுடன்  உ புணரும் எழுத்துக்கைளப் பெருவதற்கு குறித்த        எழுத்துகளுடன் ‘[‘ ஐ அத்த வேண்டும்.
    அவ்வாறே ஊ புணரும் பேது  குறித்த எழுத்துடன் ‘{‘ ஐ அழுத்த வேண்டும்.

5.   ஏ, ஊ, ஓ, ஈ .. எழுத்துக்களை தட்டச்சு  செய்வதற்கு shift + குறித்த எழுத்தை தட்டச்சு செய்ய வேண்டும்.

          shift + எ = ஏ
          shift + இ= ஈ

6.   ன், க், வ்..... எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்கு
    குறித்த எழுத்தை தட்டச்சு செய்த பின்னர் “ ; ” ஐ தட்டச்சு செய்ய வேண்டும்.

7.   கிரந்த எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்கு

     தமிழில் அதிகமாகப் பயன்பத்தப்படும் ஸ ஷ ஜ ஹ க்ஷ ஸ்ரீ போன்ற கிரந்த          எழுத்துக்கை shift உடன் q, w, e, r, t, y போன்ற எழுத்துக்களை தட்டச்சு              செய்ய வேண்டும்.

Thursday, 27 April 2017

Unicode-ஒருங்குறி பற்றி தமிழில்


யுனிகோட் (UNICODE).

ஒருங்குறி அல்லது யுனிகோட் எனப்படுவது, உலகத்தில் காணப்படுகின்ற மொழிகளின் எழுத்துக்களையும், வரியுருகளையும் ஒழுங்குப்படுத்தி எண்முறை உபகரணங்களில்  பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமமாகும்.
      உதாரணமாக:- தமிழ், சிங்களம், மலையாளம்,தெழுங்கு, சீனமொழி,அரபியமொழி என்பன                                   சில மொழியாகும்.
                              இதில் தமிழுக்கு 128 இடம் வழங்கப்பட்டுள்ளது.இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வரிவடிவங்கள் இந்நியமத்தில் அடங்கியுள்ளது. அவற்றுடன், சில அரிதாக பயன்டுபத்தப்படும் வரிவடிவங்களும், கணிதம், மொழியியல் போன்ற துறைகளில் பயன்படும் சில வரியுருகளும் அடங்கியுள்ளது. கணியுலகில் வெவ்வேறு வரிவடிவங்களுக்காக வெவ்வேறு குறிமுறைகள்  இன்று பயன்பாட்டிலுள்ளன. மேலும், தமிழ் போன்ற சில மொழிகள் ஒரே வரிவடிவத்திற்குப் பல்வேறு குறிமுறைகளும் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளைப் பயன்படுத்துவதால் உருவாகும் சிக்கல்கள் பல காணப்படுகின்றது. 
                                                                   ஒருங்குறியாது, இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளுக்கு மாற்றாக ஒரு நியம குறிமுறையை நிறுவுகின்று.  இன்று பல்வேறு எண்முறைகள், கணினியியல் நிறுவனங்களும் செயற்றிட்டங்களும் ஒருங்குறியை ஏற்றுக்கொண்டு  தமது தயாரிப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன. புதிதாக தோன்றும் நியமங்களும் ஒருங்குறியை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
                                                                                                                                அந்த வகையில் தமிழ் குறிமுறை நியமம் பற்றி நோக்குவோமானால் அஸ்கி(ASCII), தகுதரம் (TSCII), இஸ்கி(ISCII), ஒருங்குறி (UNICODE) என காணப்படுகின்றது.
0      1.   அஸ்கி (ASCII)
     ஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியைத்  தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு                   அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது.

0     2.   தகுதரம்(TSCII)
 இந்தில் இணையத்தில் புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது.அதே காலப்           பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. அத்தோடு, பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேர்க்க     இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (அதாவது, Tamil(Standard Code for Information Interchange [TSCII]) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துகள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் தமிழ் எழுத்துகள்  நிரப்பப்பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

03.   இஸ்கி(ISCII)
இஸ்கி(Indian Script Code for Information Interchange, ISCII) என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு குறியீட்டு முறையாகும். இது பெரும்பாலான மொழிகளையும், அதன் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிடத்தக்கது.அஸ்ஸாமி, பெங்காலி,(பங்காலி) ஸ்கிரிப்ட், தேவநாகரி, குஜராத்தி, அச்சுப், கன்னடம், மலையாளம், ஒரியா, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் இஸ்கீ குறியீட்டு முறை காணப்பட்டது.

04.   ஒருங்குறி (UNICODE)
ஒருங்குறி ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளை ஒன்றிணைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகமானது. விண்டோஸ் 2000/XP/2003/Vista, ஆப்பிள் மாக் 10.4, லினக்ஸ் ஆகிய அனைத்து இயங்கு தளங்களும் தமிழ் ஒருங்குறியை ஆதரிக்கின்றன. இன்று அநேகமாக உலகிலுள்ள தேடுபொறிகள் (Search Engines) கூகுல் மற்றும் யாகூ ஒருங்குறியில் தேடல்கள் செய்ய முடிகின்றது. மேலும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஒருங்குறியினூடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை ஆபி 2003 மற்றும் விண்டோஸ் XPல் அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது. உலகிலுள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.
ஒருங்குறி தமிழுக்கான அட்டவனை 


இந்தஒங்குறிஅட்டவைணயில்
Ø  தமிழ்உயிர்எழுத்துக்கள்.
Ø  மெய் எழுத்துக்கள் (‘அ’உயிடன் புணர்ந்த மெய் எழுத்துக்கள்)
Ø  தமிழ் இலக்கங்கள்
Ø  தமிழில் பயன்பாட்டிளுள்ள கிரந்த எழுத்துக்கள்
Ø   போன்ற தமிழ்சின்னங்கள்
Ø  சிறிகள், கொம்புகள்(vowel modifiers)போன்றன உள்ளடக்கப்பட்ள்ளன.          


இதன் பயன்கள்  
         இந்த ஒருங்குறியில் தட்டச்சி செய்யும் போது எல்லா கணினிகளிளும் படிக்ககூடியதாய் இருக்கும். குறிப்பாக windows xp கு பிறகு வந்த அனைத்து windows  இயங்குதளங்களிளும்  linux இயங்குதளங்களிளும் படிக்கலாம் வேறு எந்த fonts யும் தனியாக சேர்க்க தேவையில்லை.
   இணையத்தை பொறுத்த வரை மிகவும் பிரயோசனமானது.
  மின்னஞ்சல் செய்யும் போது பாமினி, கலகம், குஷ்பு போன்ற font களில் தட்டச்சி செய்து மின்னஞ்சல் செய்யும் போது  அதனை பார்க்க வேண்டும் என்றால் குறித்த கணினியிலும் தட்டச்சி செய்யப்படும் fonts காணப்பட வேண்டும். ஆனால் ஒருங்குறியில் தட்டச்சி செய்தால் அந்த பிரச்சினையாக  அமையாது

ICT பற்றி தமிழில்


தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் என்றால் என்ன?


கணினிகளுடன் தகவல்களை ஒழுங்கமைப்பு செய்தல் கணினியில் இலத்திரனியல் தொலைத்தொடர்பு போன்ற தொழிநுட்பங்களைப் பயன் படுத்தி தகவல்களை ஒரு செயல்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்பு செய்தல், பறிமாற்றம் செய்தல் போன்ற செயட்பாடுகள் உள்ளடக்கியதாகும்.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமானது பல்வேறு வகையிளும் சமுகத்தோடு தொடர்பு தொடர்பு கொண்டுள்ளது.


உதாரணம் :- கல்வித்துறை (Education)
                            போக்குவரத்துச் சேவை (Transport)
                            பொறியியல் துறை(Economic)
                            மருத்துவத் துறை(Health)
                           இராணுவ,பாதுகாப்புத்துறை
                           பொழுதுபோக்கு(Entertainment)
                           தொலைத்தொடர்பு சேவை(Communication)
                          வங்கித்துறை (Banking)









என்னை பற்றி


பெயர் -  மகேந்திரன் புதியஜோதி

முகவரி-  பதுளை, இலங்கை

தகைமை - யாழ் பல்கலைக்கழகம்( ICT 2nd year student)

தொடர்பு -  saidputhi@gmail.com/ saidjothy@gmail.com

ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு

ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு தகவல்​ தொடர்பாடல் தொழிநுட்பமானது பல வழிகளின் ஊடாக சமூகத்துக்கு பங்களிப்பு செய்கின்றது      ...