Thursday, 11 May 2017

விசைப்பலகை பற்றி தமிழில்..



விசைப்பலகை அல்லது தட்டச்சு எனப்படுவது கணினிக்கு தகவல்களை உள்ளீடு செய்ய பயன்படுத்தப்படும் கணினியின் ஒரு பாகமாகும். இது வௌிப்புறக் கருவிக்குள் அடக்கும். இந்த விசைப்பலகை இல்லாமல் தகவல்களை உள்ளீடு செய்யவது கடினமான விடயமாகும்.                                

                                                                                                         இவ்விசைப்பலகையானது எண்கள்,குறியீடுகள், கட்டளைகள் function keys (F1-F12), Number key (0-9) ,
Text key Button (A-Z) என்ற அம்சங்களை அல்லது பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 104 keys  குறையாமல் இல்லை.

                                                                                  ஆரம்ப காலத்தில் இருந்து ஒவ்வொறு காலக்கட்டத்திலும் பல்வேறு வடிவங்கங்களை கண்ட விசைப்பலகையானது இன்று திரை விசைப்பலகை தொழிநுட்பம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் இன்று மொழிக்கு ஏற்ற வகையில் விசைப்பலகைகளை பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது.
        உதாரணமாக :- தமிழ்99 தட்டச்சு (தமிழ் நாட்டு அரசின் ஏற்பு பெற்ற தமிழ்                                           மொழிக்கான விசைப்பலகையாகும்.)

                                         ரெங்கநாதன் SLS 1326 (இலங்கை அரசினால்                                                                      சீர்த்திருத்தப்பட் தமிழ் விசைப்பலகையாகும்) 

                                                                            அந்த வகையில் விசைப்பலகையில் தளக்கோலங்கள் முக்கியமானது.   தளக்கோலம் எனப்படுவது, ஒரு விசைப்பலகையில் எழுத்தொன்றிக்கு அழுத்தவேண்டிய விசை/விசைகளின் ஒழுங்கும் அவை வைப்பு முறையும் தளமாகும். இத்தளக்கோலமானது ஒவ்வொறு மொழிக்கும் தனித்தனியாக காணப்படுகின்றது.

                                ஆரம் காலத்தில் தட்டச்சுப்பொறி பயன்படுத்தப்பட்ட காலம் தொடக்கம் விசைப்பலகை பயன்பாடு வரை தமிழுக்கென தளக்கோளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வகையாகும்.
          
                                                    தளக்கோளம்

எழுத்தியல் விசைப்பலகை தளக்கோளம்
ஒலியியல்விசைப்பலகை தளக்கோளம்

1
  1.  எழுத்தியல் விசைப்பலகை தளக்கோளம்         
            ஒருஎழுத்தினுடைய பகுதிகளான கொம்பு, புள்ளி, சுலி போன்ற                               வகையில்அச்சிடப்படுகின்றது.   
               உதாரணம்   :   புள்ளி ( . )
                                                சுலி ( ி , ீ ) 
                                                கொம்பு ( ​ெ , ​ே )

      2.      ஒலியியல் விசைப்பலகை தளக்கோளம்

        ஒரு எழுத்தை அச்சிட அவ் எழுத்துக்குறிய ஒலியை ஆக்கும் ஒலிகளை                 குறிக்கும்.
             உதாரணம் :- க = (க் + அ) 
                                         ம= ( ம் +அ)
கணினி பொறியின் வருகையின் பின்னர் மென்பொருள் ஒன்றின் உதவியுடன் இயங்கும் படியாக வடிவமைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்99 தளக்கோலமே தமிழுக்கான நியம விசைப்பலகை ஆகும்.
                                                                                       
                                                                                       இந்த வகையில் இலங்கையில் ICTA வினால் தமிழுக்கான விசைப்பலகை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒருங்குறியை அடிப்படையாக கொண்டது. இதில் தட்டச்சு செய்யும் போது இதன் எழுத்துக்கள் ஒருங்குறியாகவே கிடைக்கும். அத்தோடு இந்த விசைப்பலகை மூன்று மொழிகளையும் கொண்டது.


ICTA இன் தமிழுக்கான விசைப்பலகை








இலங்கையில் தமிழ் விசைப்பலகை.

இலங்கையில் தமிழ் தட்டச்சு விசைப்பலகையானது. ரங்கநாதன் விசைப்பலகையை அடிப்படையாக கொண்டது.(சிற்சில வித்தியாசங்களை கொண்டுள்ளது.) இன்று பெரிதும் பயன்பாட்டில் உள்ள பாமினி(Bamini), கலகம்(Kalaham), குஷ்பு (Kushbu), கிளவி(Kilavi) போன்ற எழுத்துக்களும் இந்த ரங்கநாதன் விசைப்பலகையையே அடிப்படையாக கொண்டுள்ளது.

                                                                          இலங்கையில் தமிழ் தட்டச்சு செய்வதற்கு மென்மென்பொருள் ஒன்று காணப்படுகின்றது. இதனை KEY BOARD DRIVE என அழைப்பர். இதனை ICTA வழங்குகின்றது.இலங்கையில் தமிழ் தட்டச்சு செய்வதற்கு மென்மென்பொருள் ஒன்று காணப்படுகின்றது. இதனை KEY BOARD DRIVE என அழைப்பர். இதனை ICTA வழங்குகின்றது.


No comments:

Post a Comment

ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு

ICT க்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு தகவல்​ தொடர்பாடல் தொழிநுட்பமானது பல வழிகளின் ஊடாக சமூகத்துக்கு பங்களிப்பு செய்கின்றது      ...